#BREAKING பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு தீவிர சிகிச்சை; லண்டன் மருத்துவமனையில் அனுமதி!

புகழ்பெற்ற பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதை அடுத்து லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாம்பே ஜெயஸ்ரீ தமிழ், கன்னடம், தெலுங்கு,…

dtnext2023 0321c72583 604a 41f1

புகழ்பெற்ற பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதை அடுத்து லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாம்பே ஜெயஸ்ரீ தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார். சமீபத்தில் மியூசிக் அகாடமியால் அவருக்கு சங்கீதா கலாநிதி விருது வழங்கப்பட்டது.

இசை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்ற பாம்பே ஜெயஸ்ரீ, லிவர்பூலில் உள்ள ஒரு ஹோட்டலில் சுயநினைவின்றி காணப்பட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின் படி, நேற்றிரவு இரவு கடுமையான கழுத்து வலி இருப்பதாக பாம்பே ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். மேலும் இன்று காலையும், மதியமும் அவர் உணவுக்கு கூட ஓட்டல் அறையை விட்டு வெளியே வராதது உடன் தங்கி இருந்தவர்களுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதனையடுத்து அவரது அறைக்குச் சென்ற போது, அங்கு அவர் மயங்கி கிடந்துள்ளார். அங்கிருந்து உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.