உலக அரங்கில் தலைநிமிர்ந்த இந்திய சினிமா; ‘ஆர்ஆர்ஆர்’, ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படங்களுக்கு ஆஸ்கர் விருது!

உலக அரங்கில் இந்திய ரசிகர்களை பெருமை கொள்ள வைக்கும் வகையில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவிலும், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவிலும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்ட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி,ஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானது. பான் இந்தியா திரைப்படமாக வெளியான இது, வசூல் ரீதியாக இமாலய சாதனை படைத்ததோடு மட்டுமின்றி சர்வதேச அளவிலும் அங்கீகாரங்களை குவித்து வருகிறது. கோல்டன் குளோப், ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் விருது உள்ளிட்ட சர்வதேச விருதுகளை குவித்து வரும் ‘நாட்டு நாட்டு’ பாடல் உச்சகட்டமாக ஆஸ்கர் விருதையும் தட்டிச் சென்றுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நடந்த டால்பி தியேட்டரில் நடந்த 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்திய ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இரு முக்கிய விருதுகள் வசமாகியுள்ளன.

சிறந்த பாடல் ஆகிய இரு பிரிவுகளுக்கான தேர்வுப் பட்டியலில் நுழைந்த ‘ஆர்ஆர்ஆர்’, சிறந்த பாடல் பிரிவின் இறுதிப் பட்டியலில் தேர்வாகி இப்போது ஆஸ்கரை வென்று கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்குப் படம் ஒன்று ஆஸ்கர் விருதை வென்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் முதுமலை சரணாலயத்தில் யானைகளை வளர்க்கும் வயதான தம்பதி இரண்டு யானை குட்டிகள் மீது அன்பை பொழிவதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படமும் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்த படத்தை இயக்கிய உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews