தனுசு தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

தனுசு ராசியினைப் பொறுத்தவரை உறவினர்கள், குழந்தைகள், உடன் பிறப்புகள், உடல் நலன், பொருளாதாரம் என நீங்கள் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் மன நொந்து இருந்திருப்பீர்கள். திருமண காரியங்களைப் பொறுத்தவரை தள்ளிப் போன திருமணங்கள் கைகூடும்.…

dhanusu

தனுசு ராசியினைப் பொறுத்தவரை உறவினர்கள், குழந்தைகள், உடன் பிறப்புகள், உடல் நலன், பொருளாதாரம் என நீங்கள் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் மன நொந்து இருந்திருப்பீர்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தள்ளிப் போன திருமணங்கள் கைகூடும். மறுமண முயற்சிரீதியாக உங்களுக்கான வரன் அமையப் பெறும்.

கணவன்- மனைவி இடையே மிகக் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக ஏற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். பணவரவால் உங்களின் பழைய கடன்களை அடைத்து கடன் தொல்லையில் இருந்து முற்றிலும் மீள்வீர்கள்.

கடந்த காலங்களில் பண ரீதியாகச் சந்தித்த அவமானங்களில் இருந்து மீண்டு வருவீர்கள். நஷ்டத்தால் தொழிலை இழுத்துமூடும் நிலையில் இருந்தநிலையில் இனி வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர், பணப் புழக்கம் அதிகரிக்கும்.

பிரிந்த தொழில் கூட்டாளர்கள் உங்களின் நேர்மைத் தன்மையினைப் புரிந்து கொள்வார்கள். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பதவி உயர்வு, சம்பள உயர்வு தள்ளிப் போகும், உடல் நலன் ரீதியாக இருந்துவந்த மிகக் கடுமையான பின்னடைவுகள் சரியாகும்.

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து நீங்கள் கவலைப்பட்டு இருந்துவந்த நிலையில் தற்போது அதற்கான விடிவு கிடைக்கும் காலமாக இருக்கும். தந்தையுடன் இருந்த மனக் கசப்புகள் சரியாகும், பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகள் சரியாகி நேர்மறையான முடிவுகள் அமையும்.