கும்பம் மார்ச் மாத ராசி பலன் 2023!

ஜென்மத்தில் சூர்யன் – புதன், 2-ஆம் இடத்தில் சுக்கிரன், 4-ஆம் இடத்தில் செவ்வாய், 3-ஆம் இடத்தில் ராகு, 9-ஆம் இடத்தில் கேது என கோள்களின் இட அமைவு உள்ளது. நினைத்த காரியங்களைத் தயங்காமல் செய்து…

kumbam

ஜென்மத்தில் சூர்யன் – புதன், 2-ஆம் இடத்தில் சுக்கிரன், 4-ஆம் இடத்தில் செவ்வாய், 3-ஆம் இடத்தில் ராகு, 9-ஆம் இடத்தில் கேது என கோள்களின் இட அமைவு உள்ளது.

நினைத்த காரியங்களைத் தயங்காமல் செய்து முடிக்கலாம். பொருளாதார ரீதியாக பண வரவு சிறப்பாக இருக்கும்; வாங்கிய பழைய கடனை அடைப்பீர்கள்.

வேலைவாய்ப்புரீதியாக எண்ணிய கனவு வேலை கிடைக்கும். பலருக்கு வேலை செய்யும் இடங்களில் இருந்த நீண்ட கால பிரச்சினைகள் நீங்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை இருந்த தடைகள் நீங்கும்.

தொழில்ரீதியாக நண்பர்களின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் களம் இறங்குவீர்கள்

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும். மேலும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்துடன் சுற்றுலா, குல தெய்வக் கோவில் வழிபாடு என வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரை தனித்தன்மையினை வெளிகாட்டுவார்கள். தேர்வினைச் சிறப்பாக எழுதி முடிப்பீர்கள். ஞாபக சக்தி மிகச் சிறப்பாகவே இருக்கும்.

அசையும், அசையாச் சொத்துகளில் சேமிப்பதில் முழுக் கவனம் செலுத்துவீர்கள். தொட்டது துலங்கும் மாதமாக இருக்கும்.