சூர்யன் – புதன் 4-ஆம் இடத்திற்கு இடப் பெயர்ச்சி செய்கின்றனர். வேலைவாய்ப்புரீதியாக புது வேலை கிடைத்தல், பதவி உயர்வு, சம்பள உயர்வு, வேலை சார்ந்த இடமாற்றம், உயர் அதிகாரிகளின் பாராட்டு, அங்கீகாரம் என அனைத்தும் யோகப் பலனாக அமையும்.
தொழில்ரீதியாக பணப் புழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். செய்யும் எந்தவொரு தொழிலும் லாபம் அமோகமாக இருக்கும்.
திருமண காரியங்களைப் பொறுத்தவரை 6 ஆம் இடத்தில் இருந்து 7 ஆம் இடத்திற்குச் செல்வதால் வரன் கைகூடி வரும். சிலருக்கு திருமண காரியங்கள் விறுவிறுவென நடந்து திருமண தேதியினைக் குறிப்பீர்கள்.
குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள்- பிளவுகள் சரியாகும். மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்; உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும்.
மாணவர்களைப் பொறுத்தவரை எதிர்காலத்திற்குச் சிறப்பான திட்டங்களைத் தீட்டுவீர்கள். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறும்.
கோள்களின் இடப் பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலமான பலனைக் கொடுக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்கள் தள்ளிப் போன சுப காரியங்கள் நடக்கும்.