ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான தேர்வு தேதி என்ன? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

By Bala Siva

Published:

ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான தேர்வு தேதி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்வர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான தேர்வு பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணிகள் சேருவதற்கு மத்திய அரசு மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயம் இருந்து வரும் நிலையில் ஆசிரியர் தேர்வு அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.

TRBமொத்தம் இரண்டு தாள்களை கொண்ட இந்த தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியராகவும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் குறித்த அறிவிப்பு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிட்ட நிலையில் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யும் பணியும் முடிந்தது.

teacher

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தாள் ஒன்றுக்கு இரண்டு லட்சத்துக்கு அதிகமானவர்களும் இரண்டாம் தாளுக்கு நான்கு லட்சத்திற்கும் அதிகமானவர்களும் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை நடத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் தாளுக்கான கம்ப்யூட்டர் வழியாக தேர்வு பிப்ரவரி 3 முதல் 14 வயது வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு குறித்த முழு விபரங்களை https://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் இதே இணையதளத்தில் விண்ணப்பதார்களும் தங்களுடைய ஹால் டிக்கெட்டையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.