மகன் முன்னிலையில் கடைசி போட்டி.. கண்ணீருடன் விடை பெற்றார் சானியா மிர்சா!

மகன் முன்னிலையில் கடைசி போட்டியில் விளையாடிய பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து கண்ணீருடன் ரசிகர்களிடமிருந்து விடை பெற்றார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த…

sania mirza

மகன் முன்னிலையில் கடைசி போட்டியில் விளையாடிய பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து கண்ணீருடன் ரசிகர்களிடமிருந்து விடை பெற்றார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு வருகிறார் என்பதும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் அவர் தோல்வி அடைந்தாலும் கலப்பு இரட்டையர் போட்டியில் வெற்றி பெற்றார் என்பதும் தெரிந்தது.

சானியா மிர்சா மற்றும் போபண்ணா ஜோடி கால் இறுதி மற்றும் அரை இறுதியில் வென்ற நிலையில் இன்று இறுதி போட்டியில் இன்று விளையாடினர். இந்த போட்டியில் சானியா மிர்சா போபண்ணா ஜோடி வெற்றி பெறும் என்றும் தனது கடைசி போட்டியில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் சானியா மிர்சா விடை பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத வகையில் சானியா மிர்சா இந்த போட்டியில் தோல்வி அடைந்தார். இருப்பினும் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘இதே மைதானத்தில் நான் 18 வயதில் செரீனா வில்லியம்ஸ் உடன் முதல் போட்டியில் மோதினேன். தற்போது இதே மைதானத்தில் நான் கடைசி போட்டியையும் விளையாடி இருக்கிறேன். இந்த பெருமை எனக்கு போதும். நான் எனது கடைசி போட்டியை எனது மகன் முன்னிலையில் விளையாடுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை’ என்று கண்ணீருடன் அவர் விடை பெற்றார் .