கடந்த காலங்களில் சனி பகவான் மருத்துவம் ரீதியாக, வண்டி, வாகனங்கள் ரீதியாக, பிள்ளைகள்ரீதியாக எனப் பல வகைகளிலும் விரயச் செலவுகளை ஏற்படுத்தினார்.
மேலும் மூன்றாம் நபர்களின் குறுக்கிட்டால் குடும்பத்திலும் சரி, தொழில்ரீதியாகவும் சரி பல பிரச்சினைகளைச் சந்தித்து இருப்பீர்கள். சனி பகவான் உங்கள் ராசிக்குள் வருவதால் வெற்றி கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாதது போன்ற விஷயங்கள் நடந்தேறும்.
குழந்தைகள் கல்விரீதியாக தடுமாற்றம் கொண்டு இருப்பர். தவறான நட்பு வட்டாரங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் படிப்பில் நாட்டம் இல்லாமல் கவனச் சிதறல்கள் கொண்டு இருப்பர்.
உடல் ஆரோக்கியம்ரீதியாக குறைபாடுகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஜென்ம சனி இருப்பதால் வேலை செய்யும் இடங்களில் சக பணியாளர்களுடன் பிரச்சினைகள் ஏற்படும்.
மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். தொழில்துறை ரீதியாக புதிய முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். விரய ஸ்தானத்துக்குள் புதன் பகவான் பெயர்ச்சி செய்யவுள்ளார்.
கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன்கள் தள்ளிப் போகும்.