தனுசு தை மாத ராசி பலன் 2023!

கடந்த காலங்களில் பட்ட அவமானங்கள், சங்கடங்கள், துயரங்கள் அனைத்திற்கும் பதில் சொல்லும் காலமாக தை மாதம் இருக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல் உங்கள் வாழ்க்கையில் ஒளி பிறக்கும் மாதமாக தை மாதம்…

dhanusu

கடந்த காலங்களில் பட்ட அவமானங்கள், சங்கடங்கள், துயரங்கள் அனைத்திற்கும் பதில் சொல்லும் காலமாக தை மாதம் இருக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல் உங்கள் வாழ்க்கையில் ஒளி பிறக்கும் மாதமாக தை மாதம் இருக்கும்.

வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்தித்த நீங்கள் வெற்றிக் கனியினை சுவைக்கப் போகிறீர்கள். உறவினர்களால் ஒதுக்கப்பட்டு இருந்த உங்களுக்கு இது மரியாதை கிடைக்கும் காலமாக இருக்கும்.

பிரிந்து இருந்த உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். உறவினர்களால் சந்தோஷங்கள் ஏற்படும். உடன் பிறப்புகளால் உதவிகள் கிடைக்கப் பெறும். பல ஆண்டுகளாக திரும்பி வராமல் இருந்த கடன்கள் வந்து சேரும்.

பணப் புழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். புது வீடு கட்டுதல், வீட்டினைப் புதுப்பித்தல் போன்ற விஷயங்களைச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களைச் செய்வார்கள். நிம்மதி, மகிழ்ச்சி குடும்பத்தில் தாண்டவமாடும்.

தொட்டது துலங்கும் மாதமாக இருக்கும், ஆரோக்கியக் குறைபாடுகள் சரியாகும். தொழில்துறை ரீதியாக லாபத்தினைச் சந்திப்பீர்கள். வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருந்தோருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.