வாரிசு படம் சீரியலா? சீரியஸா?… தெறிக்கவிடும் ட்விட்டர் விமர்சனங்கள்!

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் விஜய் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பல நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டின் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டுள்ளன. விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் ஃபேமிலி சென்டிமெண்ட் என்பதால் டிரைலர் வெளியான நாள் முதலே அதனை சீரியல் என பலரும் கிண்டல் அடித்து வந்தனர். இந்நிலையில் வாரிசு திரைப்படம் பட்டையைக் கிளப்புமா? என்பது குறித்து பார்க்கலாம்…

ட்விட்டர் ரிவ்யூ இதோ: 

வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உள்ளதாகவும், தமனின் இசையும், இயக்குநரின் நேர்த்தியும், விஜய்யின் வித்தியாசமான ஸ்டைலும் மீண்டும் பழைய விஜய்யைக் கண்முன் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வாரிசு படத்திற்கு 5க்கு 4 மார்க் தரலாம். அந்த அளவுக்கு தரமான சம்பவங்கள் இருப்பதாக ட்வீட்கள் தூள் பறக்கின்றன. முதல் பாதி செம்ம ஜாலியாக நகர்வதாகவும், இரண்டாம் பாதி தர்மயுத்தம் ஸ்டைலில் நகர்வதாகவும் கருத்துக்கள் குவிந்து வருகிறது.

பெரும்பாலான திரை விமர்சகர்கள் 3.5 மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் படம் முழுவதும் தளபதி விஜய் மீதே ட்ராவல் செய்வதாகவும், ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் அதில் கூறப்பட்டுள்ள மெசெஜ் நன்றாக இருப்பதாகவும் ட்வீட் செய்துள்ளனர்.

சிலர் எப்படிடா இந்த சீரியல் முடியும் என காத்திருந்ததாக ட்வீட் செய்துள்ளனர்.

ஆனால் பெரும்பாலானோர் படம் சென்டிமெண்ட்டில் சிறப்பாக இருந்ததாகவும், இறுதியில் கண்ணீர் உடன் தியேட்டரை விட்டு வெளியேறுவதை தவிர்க்க முடியாது என்றும் ட்வீட்டியுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews