டிப்ளமோ முடித்தவர்களும் சட்டப்படிப்பு படிக்கலாமா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

By Bala Siva

Published:

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு முடித்து விட்டு ஏதாவது ஒரு டிகிரி பிடித்தால் மட்டுமே சட்டப்படிப்பு படிக்க முடியும் என்ற நிலையில் தற்போது 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படித்து பொறியியல் படித்தவர்களும் சட்டப் படிப்பு படிக்கலாம் என சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்திய பார் கவுன்சிலின் அறிவிப்பின்படி 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, படித்தவர்கள் மட்டுமே சட்டப்படிப்பு படிக்க முடியும் என தெரிவித்திருந்தது. 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப் படிப்பை படிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இதுகுறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் 10ஆம் வகுப்பு முடித்து விட்டு டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மூன்றாண்டு சட்டப் படிப்பு படிக்க தகுதியானவர்கள் என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் பின்பற்றவில்லை என்று கோவையைச் சேர்ந்த கோமதி என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பின் படி இனி 10ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப் படிப்பு படிக்க தகுதியானவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.