தனுசு புத்தாண்டு ராசி பலன் 2023!

குரு பகவான் 4 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். ராகு பகவான் 5 ஆம் இடத்தில் உள்ளார். 11 ஆம் இடத்தில் கேது பகவான் உள்ளார். சனி பகவான்…

Dhanusu

குரு பகவான் 4 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். ராகு பகவான் 5 ஆம் இடத்தில் உள்ளார். 11 ஆம் இடத்தில் கேது பகவான் உள்ளார்.

சனி பகவான் விலகுவதால் நல்ல காலம் பிறக்கப் போகின்றது. வேலைவாய்ப்புரீதியாக சந்தித்த பிரச்சினைகளில் இருந்து மீள்வீர்கள். வேலைப்பளு குறையும்; பதவி உயர்வு கிடைக்கும்; எதிர்பார்த்த வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும்.

2023 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை 7 மாதங்கள் சாதகமான மாதமாக இருக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டுகாலமாக தட்டிப் போன வரன்கள் கைகூடிவரும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை பிரிந்த கணவன்- மனைவி தம்பதிகள் மீண்டும் தவறுகளைப் புரிந்து ஒன்று சேர்வார்கள். கடந்தகாலங்களில் குடும்ப வாழ்க்கையில் இருந்த கசப்பான உணர்வுகள் இனிமையானதாக மாறும். கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை தன்னம்பிக்கை குறைந்து காணப்பட்ட நிலையில் இனி தைரியத்துடன் செயல்படுவீர்கள். அசையும், அசையாச் சொத்துகளில் சேமிக்க ஏற்ற சிறப்பான காலமாக இருக்கும். வெளிநாடு செல்ல நினைத்து காத்திருந்தவர்களுக்கு காலம் கணியும்.

பிரிந்த உறவினர்கள் ஒன்று கூடுவர். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் ஒழிந்து போகும். மன நெருடல்கள் குறைந்து மன மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.