கும்பம் புத்தாண்டு ராசி பலன் 2023!

2023 ஆம் ஆண்டில் 7 மாதங்கள் உங்களுக்குச் சாதகமான மாதமாக இருக்கும். சனி பகவான் 12 ஆம் இடத்தில் இருந்து ஜென்மத்திற்கு இடம் பெயர்கிறார். ஜென்ம சனி எந்தவொரு போராட்டத்தையும், பிரச்சினையினையும் தாங்கும் மனவலிமையினைக்…

Kumbam

2023 ஆம் ஆண்டில் 7 மாதங்கள் உங்களுக்குச் சாதகமான மாதமாக இருக்கும். சனி பகவான் 12 ஆம் இடத்தில் இருந்து ஜென்மத்திற்கு இடம் பெயர்கிறார்.

ஜென்ம சனி எந்தவொரு போராட்டத்தையும், பிரச்சினையினையும் தாங்கும் மனவலிமையினைக் கொடுப்பார்.  திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்ததுபோல் வரன்கள் அமையும், திருமண காரியங்கள் விறுவிறுவென நடக்கும்.

முதல் 5 மாதங்கள் வரை வேலைவாய்ப்புரீதியாக புது வேலைக்கு முயற்சிப்போருக்கு வேலை கிடைக்கும். மேலும் ராகு- கேது பகவான் உங்களுக்குச் சாதகமாக உள்ளார். சனி பகவானின் பார்வை குரு மற்றும் ராகுவின் மீது விழும்.

காதலர்கள் வீட்டில் காதலைச் சொல்லும்போது பெரிய அளவில் எதிர்ப்புகள் இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். செலவினங்கள் எதிர்பாராத வகையில் வந்து கையில் உள்ள பணம் கரைந்து போகும்.

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை ஜென்ம சனி பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாவிட்டாலும், மன அளவிலான நெருடலைக் கொடுக்கும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே மனக் கசப்புகள் ஏற்படும். கணவன்- மனைவி வீட்டார் இடையே பிரச்சினைகள் ஏற்படும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக சிறப்பாகச் செயல்படுவர். தெளிவான சிந்தனையுடன் உயர் கல்விக்காகப் படிப்பர். பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகள் பெரும் பிரச்சினைகளாகி கோர்ட்டுக்குச் செல்லும்.