மீனம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

மீன ராசியினைப் பொறுத்தவரை ஜென்மத்தில் குரு பகவான் உள்ளார், எந்தவொரு மோசமான சூழ்நிலையினை சாதகமானதாக குரு பகவான் மாற்றுவார். 10 ஆம் இடத்தில் புதன் பகவான் உள்ளார். வேலைவாய்ப்புரீதியாக நேர்மறையான சிந்தனை கொண்டு இருப்பீர்கள்.…

Meenam

மீன ராசியினைப் பொறுத்தவரை ஜென்மத்தில் குரு பகவான் உள்ளார், எந்தவொரு மோசமான சூழ்நிலையினை சாதகமானதாக குரு பகவான் மாற்றுவார்.

10 ஆம் இடத்தில் புதன் பகவான் உள்ளார். வேலைவாய்ப்புரீதியாக நேர்மறையான சிந்தனை கொண்டு இருப்பீர்கள். 2 ஆம் இடத்தில் ராகு பகவான், 3 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான், 11 ஆம் இடத்தில் இருந்து சுக்கிரன் 10 இடத்திற்கு இடப் பெயர்ச்சி அடைகிறார்.

வேலைவாய்ப்புரீதியாக புதிதாக வேலைக்கு முயற்சிக்காமல் இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது. தொழில்ரீதியாக அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் ஈடுபடாமல் இருத்தல் வேண்டும், பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

திருமண காரியங்களைப் பொருத்தவரை எதிர்பார்த்த வரன்கள் தட்டிப் போகும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே மூன்றாம் நபர்களின் தலையீட்டால் பிரச்சினைகள் பெரிதாகும்.

உடன் பிறப்புகள் சொத்துகள் ரீதியாக பிரச்சினையினை ஏற்படுத்துவார்கள். மாணவர்கள் உயர்கல்விரீதியாக புதன்- குரு பகவானின் ஆதிக்கத்தால் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை உணவுசார்ந்த உடல் கோளாறுகள் ஏற்படும். பெற்றோரின் உடல் நலனில் அக்கறை தேவை, வீண் விரயச் செலவுகள் ஏற்படும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை கூடுதல் பொறுப்பு, கூடுதல் வேலை இருக்கும்.