தினமும் குளித்ததும் buds பயன்படுத்துபவர்களா நீங்கள்.. இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கு தான்!

By Velmurugan

Published:

buds பயன்படுத்துவது சரியா.. தவறா .. என தெரிந்து கொள்ள ஆசையா? முதலில் இந்த பதிவை கவனியுங்கள்.

ஆஸ்திரேலியாவில் 37 வயதுடைய பெண் ஒருவர் தினமும் குளித்து முடித்ததும் buds பயன்படுத்தி தனது காதுகளை சுத்த படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். ஒரு நாள் அவருக்கு காதில் அதிக இரத்தம் வெளிவர துவங்கியது உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார்.

அவருக்கு பரிசோதனையில் buds பயன்படுத்தி காதுகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது . buds தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் அது அவரின் காதுகளை தொடர்ந்து மண்டை ஓட்டையும் அரித்துள்ளதாக மருத்துவ சான்றிதழ் வந்துள்ளது. அதன் பின் ஆபத்தை உணர்ந்த மருத்துவர்கள் அதை பெரிய அறுவை சிகிச்சை செய்து சரிசெய்தனர், அப்படி இருந்தும் அவருக்கு ஒரு காது கேட்கவில்லை.

இப்போது நமக்கு புரிந்திருக்கும் buds பயன்படுத்துவது சரியா அல்லது தவறா என்று. நாம் பொதுவாக காதுகளில் இந்த budsயை எதற்காக பயன்படுத்துகிறோம் , காதுகளில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய என கூறுவோம்.

அதிலும் பலர் buds பதிலாக ஊக்கு , தலைக்கு பூ குத்தும் மாட்டி , பைக் கார் சாவி , பேனா ,பென்சில் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் பயன்படுத்தி காதுகளில் விடுவார்கள் , அது எல்லாம் மிகவும் தவறான முறை.

நமது காத்து மிகவும் மென்மையான பகுதி அதில் இந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்தி உள்ளே விடுவது மிகவும் தவறு.

அதற்க்கு முன்னதாக காதுகளில் நாம் சுத்தம் செய்ய முயல்வது எதற்கு என தெரிந்து கொள்வோம். இதை காதுகளில் இருக்கும் அழுக்கு என நாம் நினைத்திருக்கிறோம், மேலும் சிலர் இது மெழுகு போல இருப்பதால் இதை வாக்ஸ் என கூறுகிறார்கள். ஆனால் இதன் பெயர் குடுமி.

இது எதற்க்காக நமது காதுகளில் இருக்கிறது தெரியுமா, நாம் முன்னதாக கூறிய படி நமது காது மிகவும் மென்மையான பகுதி அளவுக்கு அதிகமான சத்தம் கேட்கும் பொழுது அது பாதிப்புக்கு உள்ளாகும். மேலும் காதுகளில் eardurm ஒன்று உள்ளது. இதில் சத்தங்கள் கேட்க்கும் போது தான் நமக்கு காது சரியாக கேட்க்கும் .

அதை பாதுகாக்க தான் செறிமினோஸ் என்னும் சுரப்பி இந்த குடுமியை சுரக்கிறது. நமது கண்களுக்கு பாதுகாப்பாக கண் இமை உள்ளதோ அது போல காதுகளுக்கு பாதுகாப்பாக தான் இந்த குடுமி உள்ளது.

இது நம் காதை காற்று ,கிருமி , அதிக சத்தம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது. அதனால் தான் இந்த குடுமியை நாம் வெளியே எடுப்பது தவறு.

சில நேரங்களில் நம் காதுகளில் பூச்சுகள் சென்று விடும் அப்போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?.. நம் வீடுகளில் உள்ள சுத்தமான நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை காதுகளில் விட வேண்டும். அப்படியும் பூச்சி வரவில்லை என்றால் மருத்துவரிடம் மட்டுமே செல்ல வேண்டும்.

அதென்ன பஞ்சகவ்ய விளக்கு? இதை வீட்டில் ஏற்றினால் இத்தனை நன்மைகளா?

இதை தவிர்த்து நாம் buds பயன்படுத்தினால் பூச்சி மேலும் காதுகளின் உள்ளே சென்று விடும்.

நம் காதுகளை கவனமாக பார்த்து கொள்ளுவோம் buds பயன்படுத்துவத்தை தவிர்ப்போம்.