நம்மளோட கரண்ட் பில் அடிக்கடி அதிமாக வரும். கரண்ட் பில் அதிகமாக வருவதால், அதை கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள நீங்க இதை, அதை வாங்கி வைக்க வேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை.
இந்த பதிவில் நம்ம வீட்டுல இருக்குற பொருட்களை எப்படி சரியான முறையில் பயன்படுத்தினால் கரன்ட் பில்லை மிச்சப்படுத்தலாம் என பார்க்கலாம்.
அதுக்கு முன்னாடி நம்ம யூஸ் பண்ற பொருட்கள் மூலமாக எப்படி கரண்டு பில் வருதுன்னு பார்க்கலாம் வாங்க..
ஒரு யூனிட் என்பது 1000 வாட்ஸ் மற்றும் 1000 வாட்ஸ் என்பது ஒரு யூனிட் என்பதை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக முன்பு எல்லாம் ஒரு 60 வாட்ஸ் குண்டு பல்பு தான் அதிகமாக பயன்படுத்தினோம். ஆனால் இப்போது ஏசி, ஃப்ரிட்ஸ், வஷிங்மெஷின், எல்இடி என நிறைய மின் சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம்.
100 வாட்ஸ் பல்பு ஒரு மணி நேரம் எரிந்தால் 100 வாட்ஸ் எடுக்கும். அதுவே 10 மணி நேரம் இருந்தால் அது 1000 வாட்ஸ் அதாவது ஒரு யூனிட் என்பதுதான் நமது கணக்கு. ஒரு 100 வாட்ஸ் பல்பு 10 மணி நேரம் அதாவது 1000 வாட்ஸ் அளவுக்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் அதன் அர்த்தம்.
நமது வீட்டில் பெரும்பாலும் அதிகம் ஓடிக் கொண்டிருக்கும் ஒரே பொருள் மின்விசிறி (கத்தாடி). ஒரு தோராயமான கணக்கிற்கு மின்விசிறியை 24 மணி நேரமும் உபயோகப்படுத்துகிறோம் என்றால் 1800 வாட்ஸ் ஆகும். ஒரு மின்விசிறி ஒரு நாளைக்கு தோராயமாக 1800 வாட்ஸ் அதாவது 1.8 யூனிட் கரண்டு எடுத்துக்கொள்கிறது.
1.8 யூனிட் 24 மணி நேரம் என்றால் 30 நாளுக்கு 54 யூனிட் மட்டும் எடுக்கிறது.
மேலும் ஏசி பயன்படுத்துகிறோம் என்றால் தோராயமாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு யூனிட் ஆகும். அதாவது இரவு முழுவதும் 5 மணி நேரம் என்றாலும் ஒரு நாளைக்கு 5 யூனிட் எடுத்து விடும். அதாவது மின் விசிறி 24 மணி நேரமும் உபயோகித்து ஒரு நாளைக்கு 1.8 யூனிட் வீதம் மாதம் 54 யூனிட் ஆகிறது என்றால், ஏசி தினமும் 5 மணி நேரம் உபயோகித்தாலே ஒரு மாதத்திற்கு தோராயமாக 150 யூனிட் ஆகும்.
இதேபோல் மிக்ஸி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர் இதெல்லாம் சேர்த்து பார்க்கும் போது நம்முடைய கரண்டு பில் அதிகமாகத்தான் கண்டிப்பாக வரும்.
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு மின் சாதனப் பொருட்களிலும் அந்த சாதனம் எவ்வளவு வாட்ஸ் எடுக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதை எவ்வளவு நேரம் பயன்படுத்தினால் எவ்வளவு யூனிட் எடுக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அளவோடு பயன்படுத்தினால் நிச்சயம் ஒரு குறிப்பிட்ட அளவு மின் கட்டணத்தை சேமிக்க முடியும்.