பூரினு சொன்ன போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க, அதுவும் கடையில பூரி வாங்குனா நல்ல உப்பலா மிருதுவா கலர்புல்லா இருக்கும். அதே அளவுக்கு வீட்டுல புசு புசுனு வராது, வீட்டுலே அது போல புசு புசுனு உப்பலாக மிருதுவா பூரி வரணுமா இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு : கால் கிலோ
வெள்ளை ரவை : 1 1/2 தேக்கரண்டி
சர்க்கரை : 1 தேக்கரண்டி
தண்ணீர் : தேவையான அளவு
உப்பு : சுவைக்கு ஏற்ப
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
கோதுமை மாவு, ரவை, சர்க்கரை முதலில் நன்கு கலந்து கொள்ளவும்..அதனுடன் 2 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் உப்பு, நன்றாக, மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
கோதுமை மாவுடன் ரவையை சேர்த்து மாவு விரவும் போது பூரி உப்பலாக வருவதுடன், நீண்ட நேரம் அதே போல நீடித்திருக்கும். பூரி நல்ல பிரவுன் கலரில் வர சர்க்கரைசேர்த்து கொள்ளவும்.
பூரிக்கு மாவு தயார் செய்யும் பொது தண்ணீர் கவனமாக கலந்து கொள்ளவும். அதிகமாக சேர்த்தால் பூரி சப்பி சப்பாத்தி போல வரும்.
மொபைல் மூலம் எளிதாக ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பது எப்படி?
அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, தேய்த்த மாவை ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும். பூரி மாவை எண்ணெயில் போட்ட ஒரு சில நொடிகளில் சிறிது அழுத்தி விடவும்; அப்போது பூரி நன்றாக உப்பி வரும்.