மொபைல் மூலம் எளிதாக ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பது எப்படி?

By Velmurugan

Published:

சமீபகாலமாக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற ஒரு பெரிய பிரச்சனை தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. மேலும் பெரும்பாலான மக்கள் எப்படி இதை செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

தமிழகத்தில் தகுதி வாய்ந்த மானியம் மக்களுக்கு கொடுப்பதற்கும், போலியான மின் இணைப்பு கண்டறிவதற்காக ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தமிழக மின்வாரிய அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எளிதாக நமது மொபைலில் இருந்து நம்மால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முடியும். அது எவ்வாறு செய்யலாம் என பார்க்கலாம் வாங்க!..

தேவையான ஆவணங்கள்:-

ஆதார் அட்டை
மின் இணைப்பு அட்டை
Aadhar card-ன் புகைப்படம் (300 KB)

செயல்முறைகள்:-

1) முதலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tangedco.gov.in அல்லது https://adhar:tnebltd.org/adharupload/ என்ற முகவரிக்கு செல்லவும்.

2) அதில் மின் இணைப்பு எண் மற்றும் செல்போன் எண் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.

3)பின்னர் மொபைல்-க்கு வரும் OTP யை கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.

4) பின்னர் அடுத்த பக்கத்திற்கு செல்ல வேண்டும் . அதில் உரிமையாளரின் பெயர் விவரங்கள் பதிவு செய்ய வேண்டும். அப்போது மின் இணைப்பு உரிமையாளரின் ஆதார் எண் அல்லது வாடகை நபரின் ஆதார் எண்ணை சரிசெய்து உள்ளிடவும்.

5) நீங்கள் மின் இணைப்பு உரிமையாளரின் வீட்டில் இருந்து உங்களது ஆதார் எண்ணை இணைத்தால் உரிமையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பி சரிபார்க்கபடும்.

5)பின்னர் Aadhar card-ன் புகைப்படத்தை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

6) பின்னர் நாம் கொடுத்துள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என சான்றிதழ் கொடுக்க வேண்டும்.

7) பின்னர் submit செய்ய வேண்டும்.

8) உடனே உங்களுக்கு ஆதார் எண் மற்றும் மின் இணைப்பு உறுதி செய்யப்படும் என்ற தகவல் வரும்