புரூஸ்லி.. அறியப்படாத உண்மை சம்பவங்கள்!

By Velmurugan

Published:

வெறும் 32 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் வைத்திருந்தவர் தான் இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன் புரூஸ்லி. ஆனால் புரூஸ் லீ மனிதரை இல்லன்னு சொல்லப்படுகிறது. மனிதர்களால் இதையெல்லாம் கண்டிப்பா செய்யவே முடியாது அப்படி பட்ட பல விஷயங்களை புரூஸ்லி மட்டும்தான் செய்து இருக்கிறார்.

brus lee

அவருக்கு பின்னால் வந்த யாராலும் அவரை கிட்ட நெருங்கவே முடியவில்லை என்று கூறுகிறார்கள். இப்படி ஒரு உடல் தோற்றம் கொண்ட அவரால் எப்படி நிகழ்த்த முடியும் உண்மையில் மனித பிறவியில் இவரை யாராலும் ஜெயிக்க முடியாது. அவரது உடம்பில் கத்தியைக் கொண்டு தாக்கினாலும் கத்தி இறங்காது என எல்லாம் கூறுவார்கள். இளம் வயதிலிருந்தே கராத்தே குங்ஃபூ தற்காப்புக் கலைகளை கற்று வந்தார்.

அதில் ஒரு முக்கியமான தாக்குதல் முறைதான் சைட்கிக். இதை எல்லோராலும் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியாது. இது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதனால்தான் அவர் நடித்த அத்தனை படங்களுமே இந்த சைட்கிக் சண்டை இருக்கும். அதுவும் படத்தில் பார்க்கும் பொழுது இளைஞர்களின் முறுக்கேற்றும் அளவிற்கு இருக்கும். கிட்டத்தட்ட 45 கிலோ கிராம் எடை கொண்ட மணல் மூட்டையை சிதறடிக்கும் நிபுணராக இன்று வரை இவர் மட்டும் தான் இருக்கிறார்.

bruce lee 2

நன்சக்ஸ் என்பது சங்கிலியோடு பிணைக்க பட்ட இரு கை பிடிக்கலை கொண்ட தற்காப்புக் கலை தொடர்புடைய ஒரு ஆயுதமாகும்.இவரது பெரும்பாலான படங்களில் அவர் இதை பயன்படுத்துவதை நம்மால் பார்க்க முடியும். மின்னல் வேகத்தில் கையை சுழற்றி எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் அவர்களை தாக்கவும் இதை பயன்படுத்துவார்கள். இவரது ஒரு கிக் 150 கிலோ கிராம் அளவிலான ஆற்றலைக் கொண்டதாக குத்துச்சண்டை வீரர் முகமது அலி என்பவரை சமமானது என கூறப்படுகிறது.

ஆனால் முகமது அலி 118 கிலோ எடை கொண்டவர். ஆனால் இவரின் எடை வெறும் 59 கிலோ இருந்தாலும் இது எப்படி சாத்தியமானது என்பதை யாராலும் நம்ப முடியவில்லை. புரூஸ்லி ஒரே வினாடியில் ஆறு முறை சைட்கிக் செய்ய முடியும். அவருக்கு பிடித்த சைட்கிக் மூலமாக 90 கிலோ எடை கொண்ட மனிதனை 60 அடி தூரத்திற்கு அப்பால் சென்று விழ வைக்க முடியும்.

burce lee 1

வெறித்தனமாக உடற்பயிற்சி செய்வது ப்ரூஸ்லீயின் வழக்கம்.ஒரு நாளின் பெரும்பாலான நேரங்களில் உடற்பயிற்சி செய்வதுதான் அவரது நோக்கமாக இருந்தது. உடலுக்கு வயிற்றுப்பகுதிதான் அடிப்படையாகச் செயல்படுகிறது என நம்பிய புரூஸ்லி வயிற்றுப் பகுதிக்கு அதிகமான கவனம் செலுத்தி உடற்பயிற்சி செய்தால் அது கடினமான உடற் பயிற்சியை வயிற்றுக்காக பல மணி நேரம் உடற்பயிற்சி செய்வார்.

மேலும் 135 கிலோ எடை கொண்ட மணல் மூட்டைகள் 16 அடி மேலே பறக்க விட்ட சாதனையை நிகழ்த்திக் காட்டிய ஒரே நபர்தான். இதுவரை அவர் சந்தித்த எதிலுமே அவர் தோல்வியை சந்தித்தது இல்லை. திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த புரூஸ்லி அவர் சண்டை போடும் காட்சிகள் அனைத்தும் அதிவேகத்தில் இருந்ததால் அவரது சண்டைக்காட்சிகளை கேமராக்களில் பதிவு செய்வதே மிகவும் கடினமானதாக இருக்கிறது, எல்லா காட்சிகளும் மங்கலாக தான் தெரியும் அளவிற்கு இருக்கும்.

bruce lee 3

இதனால் கொஞ்சம் மெதுவான செய்யுங்கள் என திரைப்படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு மின்னல் வேகத்தில் அவரது சண்டை காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஒருமுறை புரூஸ்லி பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருடன் சண்டை போட்ட நபரை சாதாரணமாக தாக்கிய போது அவரது தோள்ப்பட்டையில் நகர்ந்து போய் விட்டதாம். சாதாரணமாக அடித்ததற்கு இப்படி ஒரு நிலைமை என்றால் மிகவும் பலசாலியான அவர் யாரையாவது தாக்கினால் அவர் நிலைமை என்னவாகும் என்பதை பலரும் இன்று வரை கேள்விகள்.

திருமண கொண்டாட்டத்தில் ஜோடியாக கலக்கும் ஹன்சிகா மோத்வானி! கியூட் போட்டோஸ்!

இந்த உலகத்தில் மிக வலிமையான மனிதராகவும் தற்காப்பு கலைக்கு ராஜாவாகவும் விளங்கியவர் இந்த அசாத்தியமான நிகழ்வுகளை நிகழ்த்திய அவர் உண்மையிலேயே மனிதனாக தான் இருப்பாரா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அசாத்தியமான நிகழ்வுகளை இன்னும் பலரால் நம்ப முடியாத அளவிற்கு உள்ளது. எத்தனை யோசித்தாலும் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.