நாம் அன்றாட வாழ்வில் எடுத்து கொள்ளும் குழம்பு வகைளில் மிகவும் முக்கியமானது சாம்பார். சாம்பார் அனைவரது வீட்டிலும் குறைந்தது வாரத்திற்கு 2 முறையாவது சமைப்பது உண்டு. அந்த சாம்பார் ரெசிபியை எப்போதும் ஒரே மாதிரியாக சமைக்காமல் வித்தியாசமாக செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி வித்தியாசமாக சம்பார்களில் உடுப்பி ஸ்டைல் சாம்பார் மிகவும் பெயர் பெற்றது. அதை நம்மால் வீட்டுலயே செய்ய முடியும் என்றால் எதற்கு கடைக்கு சென்று வாங்க வேண்டும்.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 1/2 கப்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 4
மல்லி – 1 1/2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது துருவிய
தேங்காய் – 1/4 கப்
சின்ன வெங்காயம் – தேவையான அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
காய்கறிகள் (கத்திரிக்காய், கேரட், பரங்கிக்காய்) – 2 கப்
புளிச்சாறு – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
https://tamilminutes.com/katrikai-oorukai-receipe/
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை எடுத்து நன்கு சுத்தமாக நீரில் கழுவி கொள்ள வேண்டும். குக்கரில் வைத்து அதை நன்கு வேக வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த பருப்பை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் மிளகாய், மல்லி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் அதை ஆற வைத்து, மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். பின்னர் அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி விட்டு சிறிது நேரம் வேக வைக்க வேண்டும். அடுத்து, அதில் தண்ணீர், புளிச்சாறு, வெல்லம் , உப்பு சிறிது நேரம் அதை கொதிக்க விட வேண்டும். கடைசியில் மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, மசாலா வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான உடுப்பி ஸ்டைல் சாம்பார் ரெடி.