‘விடங்கம்’ என்றால் ‘உளியால் செதுக்கப்படாத’ எனப்பொருள். உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்களே விடங்க தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அந்தவகையில் தமிழ்நாட்டில் 7 விடங்க தலங்கள் இருக்கின்றன. 7க்கு சப்த என தமிழில் பெயர். இந்த 7 தலங்களிலும் இறைவன் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். சப்த விடங்க தலங்கள் எவைன்னு பார்க்கலாமா?!
திருவாரூர் – வீதி விடங்கர்
திருநள்ளாறு – நகர விடங்கர்
திருநாகைக்காரோகணம் – சுந்தர விடங்கர்
திருக்காறாயில் – ஆதி விடங்கர்
திருக்குவளை – அவனி விடங்கர்
திருவாய்மூர் – நீல விடங்கர்
திருமறைக்காடு – புவன விடங்கர்
என்பவையே அந்த சப்த விடங்க தலங்களாகும்..