இட்லி ,தோசை, சப்பாத்தி , சாதம் என அனைத்திற்கும் பொருந்தும் வகையில் கறிக்குழம்புக்கு இணையான மணமணக்கும் வெஜிடபுள் குருமா வீட்டிலே பண்ணலாமா…
தேவையான பொருட்கள்
கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர் – 150 கிராம்,
பச்சை மிளகாய் – 2,
வெங்காயம் – 1 ,
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி,
தேங்காய் – 2 தேக்கரண்டி,
பட்டை – ஒன்று, சோம்பு – அரை டீஸ்புன் , ஏலக்காய் – 2, கிராம்பு – 4, கசகசா – அரை டீஸ்புன் .
உப்பு – சுவைக்கு ஏற்ப ,
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப.
மல்லி புதினா இலை – கைப்பிடியளவு
ஹோட்டல் ஸ்டைல் மணமணக்கும் கடாய் மஷ்ரூம் சாப்பிடணுமா? இதோ பாருங்க..
செய்முறை:-
முதலில் கசகசாவை தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.காய்கறிகளை சுத்தம் செய்து நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காயைத் துருவளுடன் கசகசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும் , அதில் பாதியளவு பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பாத்திரத்தை மாற்றி ஆற வைக்கவும்.
அதன் பின் இந்த கலவையை அரைத்து கொள்ளவும் , வாணலியில் மீதமுள்ள பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு சேர்த்து தாளித்து, காய்கறிகள் மற்றும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத இன்ஸ்டன்ட் இட்லி மாவு!
காய்கறிகள் மசாலாவுடன் சேர்ந்து வெந்ததும், தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும் அதில் மல்லி புதினா இலை போட்டு இறக்கினால் சுவையான வெஜிடபுள் பிரியாணி குருமா தயார்.