பள்ளி குழந்தைக்குகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுப்பது நம் கடமை , அதிலும் அவர்கள் விருப்பமாக சாப்பிடும் வேர்க்கடலை உருண்டை செய்தால் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள்.
வேர்க்கடலை உருண்டை செய்ய தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை – 2 கப் தொலியை எடுத்தது
வெல்லம் – 1 / 2 கப்
ஏலக்காய் தூள் – 1 / 2 டீஸ்புன்
அரிசி மாவு – சிறிதளவு
கோதுமை மாவில் சப்பாத்தி மட்டும் இல்ல இனி குளோப் ஜாமுனும் செய்யலாம் தெரியுமா..?
செய்முறை
வேர்க்கடலையை தோல் நீக்கி சுத்த படுத்தி கொள்ளவும்.
வெல்லத்தைப் பொடித்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைய விட்டு, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு பாகு பதம் வந்ததும் இறக்கி கொள்ளவும்.
கடலையைப் பாகில் கொட்டி ஏலக்காய் தூள் சேர்த்துக் கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும்.
சூடு தாங்க முடியாதவர்கள், அரிசி மாவு தொட்டுக் கொண்டு உருட்டலாம். இளம் சூட்டில் உருட்ட வேண்டும்.