அடி தூள்!! இன்ஸ்டாவில் ‘ New Age’ வெரிஃபிகேஷன்.. எப்போது தெரியுமா?

வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப மெட்டா நிறுவனம் பல்வேறு அசத்தல் அறிவிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் இந்தியாவில் தனது Age Verification என்பதை அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் முன்னதாக அமெரிக்காவில் சோதனை ஓட்டம் நடைப்பெற்ற நிலையில், இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் படி, இன்ஸ்டகிராம் தளத்தில் பயனர்களின் வயதானது 18 கீழ் உள்ளதா? அல்லது அதற்கு அதிகமாக உள்ளதா? என்பதை இத்தைய அம்சத்தின் மூலம் கண்டறிய பயன்படுகிறது.

மேலும், இதற்காக பிரிட்டனை சேர்ந்த யோடி எனும் டிஜிட்டல் சான்று நிறுவனத்துடன் மெட்டா நிறுவனம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இத்தகைய சேவை விரைவில் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews