விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுதூர் அருகே சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலில் புரட்டாசி மாதங்களில் 13 நாட்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் புரட்டாசி மாத பிரதோஷம், நவராத்திரி, அம்மாவாசை போன்ற தினத்தில் பக்தர்கள் பலரும் சதுரகிரி மலைக்கு படையெடுப்பர். இதன் காரணமாக செப்.23 முதல் அக்டோபர் 5 வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இரவில் மலைப்பகுதிகளில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமது மறுக்கப்பட்டுள்ளது. அதே போல் வனப்பகுதிக்குள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லவும், நீரோடைகளில் பக்தர்கள் இறங்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி என்றும் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது.