தற்போதைய காலத்தில் அனைத்து துறைகளிலும் அரசியல் போன்று தேர்தல் நடைபெற்று கொண்டு தான் வருகிறது. அவற்றில் முக்கியமான ஒன்றாக திரைப்படத்துறை மாறி உள்ளது. ஏனென்றால் திரைப்படத்துறையில் இயக்குனர் சங்கம், நடிகர் சங்கம், எழுத்தாளர் சங்கம் என அனைத்திற்கும் தேர்தல் நடத்தி வாக்கு பதிவு முறையில் தான் தலைவர், செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் இன்றைய தினம் திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் வாக்குப்பதிவானது நடைபெற்றுள்ளது. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னையில் வடபழனியில் நடைபெற்று கொண்டு வருகிறது.
எழுத்தாளர் சங்கத் தேர்தலில் பாக்கியராஜ், எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் 2 அணியினர் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர்.
பாக்யராஜ் அணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு கண்ணன் மற்றும் காரைக்குடி நாராயணன் போட்டி போடுகின்றனர். பாக்கியராஜ் அணியில் செயலாளர் பதவிக்கு லியாகத் அலிகான் பொருளாளர் பதவிக்கு பாலசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மற்றும் அணியில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் துணைத்தலைவர் பதவிக்கு மனோபாலா, ரவி மரியா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் செயலாளர் பதவிக்கு மனோஜ் குமார் பொருளாளர் பதவிக்கு ரமேஷ் கண்ணா ஆகியோரின் போட்டியிடுகின்றனர்.