கிரிக்கெட் உலகில் மிகவும் விறுவிறுப்பான போட்டி என்றால் அதனை இந்தியா-பாகிஸ்தான் போட்டி இன்றைய கூறலாம். ஏனென்றால் ஒவ்வொரு முனையும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்பது அனைவருக்கும் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படும்.
அந்த வகையில் தற்போதைய ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி உள்ளது. ஏனென்றால் நேற்றைய தினம் நடந்த சூப்பர் போர் சுற்றில் இந்தியா, பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக முன்னாள் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 60 ரன்கள் அடித்தார்.
இதன் பின்பு களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர் ரிஸ்வான் தனது 71 ரன்கள் வரை தக்கவைத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார். இதனால் இந்திய அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் இதற்கான இந்த தோல்விக்கான காரணம் பற்றி பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
அதில் ஆரம்பத்திலேயே ரிஸ்வான் விக்கெட்டை இந்திய அணி பந்துவீச்சாளர்கள் எடுக்காதது தோல்விக்கு முதல் காரணமாக அமைந்தது என்று கூறுகின்றனர், மற்றொருபுறம் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் சொதப்பியது மட்டும் இல்லாமல் பந்துவீச்சிலும் 44 ரன்கள் கொடுத்து தோல்விக்கு வழி வகுத்ததாகவும் கூறுகின்றனர். மேலும் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களின் விக்கெட்டை எடுக்காததும் மற்றொரு காரணமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளனர்.