விநாயகர் சதுர்த்தி அன்று உங்க பிள்ளையாருக்கு சுலோகங்களுடன் ஸ்பெஷலா பூஜை செய்யுங்க..!

By Sankar Velu

Published:

தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வாக வணங்கப்படுபவர் விநாயகர். அதனால் தான் அவரை நாம் முழுமுதற் கடவுளாக வணங்குகிறோம். தடைகளைத் தகர்த்து வினைகளைத் தீர்த்து வெற்றி தருபவர் தான் விநாயகர். அதனால் தான் நாம் அவரை மூலக்கடவுளாகவும் வணங்குகிறோம்.

விநாயகர் சதுர்த்தி அன்று விநயாகருக்கு பூஜை செய்யும்போது நாம் சொல்ல வேண்டிய 8 முக்கிய ஸ்லோகங்கள் எவை எவை என்று பார்ப்போம். இதை நாம் எப்போதுமே சொல்லலம். இதுவரைப் படிக்காதவர்கள் படித்துப் பயன்பெறுங்கள்.

pillaiyarpatti
pillaiyarpatti

கடவுளை சும்மா வெறுமனே வணங்குவதை விட சுலோகங்களைச் சொல்லி வணங்கிப் பாருங்க. குழந்தைப் பருவத்திலேயே உங்கள் வீட்டுச் செல்லக் குழந்தைகளுக்கு இந்த சுலோகங்களை சொல்லிக் கொடுங்க.

உங்களுக்கு அதற்குண்டான தனி ஆத்ம திருப்தியே கிடைக்கும். என்ன இந்த சுலோகங்களைப் பாராயணம் செய்தால் எங்கும் எழுதிக் கொண்டு போக வேண்டிய தேவையில்லை. அல்லது புத்தகத்தைக் கொண்டு போகவும் தேவையில்லை. என்ன படிக்கலாமா…

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

 கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே..!

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம்
மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித்
தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

விநாயகனே வெவ்வினையை
வேரறுக்க வல்லான்!
விநாயகனே வேட்கை
தணிவிப்பான்! விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும்
நாதனுமாம்
தன்மையினால் கண்ணில்
பணிமின் கனிந்து..!

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பஷிதம்
உமாஸ_தம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத
பங்கஜம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா!

விநாயகர் சகஸ்ரநாமம்

vinyak
vinyak

சுக்லாம்பரதரம், விஷ்ணும்
சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ
விக்நோப சாந்தயே..

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி
போற்றுகின்றேனே…!

 

Leave a Comment