மகரம் ஏழரை சனி, மகரத்திலேயே சனி, மூன்றாம் இடத்தில் குரு, செவ்வாய் ரிஷபத்தில், சுக்கிரன் 8 ஆம் இடத்தில், புதன் 9 ஆம் இடத்தில், ராகு 4 ஆம் இடத்தில், கேது 10 ஆம் இடத்தில் என கோள்களின் இட அமைவு உள்ளது.
வேலைவாய்ப்பு ரீதியாக புது முயற்சிகள் எடுக்காமல் இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்தல் நல்லது. வேலைப்பளு, வேலைசார்ந்த மன அழுத்தம், கோபம் என பலவிதமான மனநலம் சார்ந்த பிரச்சினைக்கு ஆளாவீர்கள்.
தொழில்ரீதியாக அபிவிருத்தி செய்வதை சிறிது காலம் தள்ளி வைத்தல் நல்லது. திருமண காரியங்களில் காலதாமதம் இருக்கும், பொறுமையுடன் கையாள்தல் வேண்டும்.
குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்படும், இது உறவில் விரிசல் அளவுக்குக் கொண்டு செல்லும். மேலும் குழந்தைப் பேற்றிற்காக எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு தாமதம் ஏற்படும் மாதமாக இருக்கும்.
மாணவர்கள் எதிர்காலம் குறித்து மனக் கவலையில் இருப்பார்கள், ஆனால் இதுபோன்ற கவலை கொள்ளாமல் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துதல் நல்லது. சனி பகவான் மாணவர்களை சோதிப்பார், மேலும் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் என அனைத்தும் வலுவிழந்து காணப்படும்.
வண்டி, வாகனங்களை தற்போதைக்கு வாங்குவதைத் தவிர்க்கவும். மேலும் வெளியூர்ப் பயணங்கள், இரவு நேரப் பயணங்களில் கவனம் தேவை. பொறுமை, நிதானம், சகிப்புத் தன்மை, அமைதி போன்றவையே பிரச்சினைகளை ஓரளவு கடக்க உதவும்.