விநாயகர் சதுர்த்தி வருகிறது. நாம் நிறைய படிக்க வேண்டுமே என்று பயப்படக்கூடாது. எது தெரிந்தால் எல்லாம் தெரிந்ததாகுமோ… அதை மட்டும் கற்றுக்கொண்டால் போதும். அந்த வகையில் தற்போது நாம் விநாயகர் அர்ச்சனையில் முக்கியமான சிலவற்றைப் பார்க்கலாம்.
கணபதிக்கு திருநீற்றால் அர்ச்சனை செய்து அந்தத் திருநீற்றை நாம் பூசிக்கொண்டால் கணபதியின் அருள் கிடைக்கும். இந்த அருள் சித்தியானது ஆதிமூலர் கணநாதரின் திருவடியைத் தொழுதொழுவதன் மூலம் கிடைக்கும். தொடர்ந்து நமக்கு நம்மை அறியாமலேயே பல பலன்கள் கிட்டும். இத்தகைய நாமஜெபத்தை நமக்கு வழங்கியவர் மகான் அகத்தியர்.
இதையும் படியுங்கள்: விநாயகர் சதுர்த்தி அன்று உங்க பிள்ளையாருக்கு சுலோகங்களுடன் ஸ்பெஷலா பூஜை செய்யுங்க..!
நம் எண்ணம், சொல், செயல் அத்தனையையும் ஒருமுகப்படுத்தி இந்த அர்ச்சனையை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்துள்ள பொருட்களை நாம் சூடிக்கொள்ளலாம்.
ஓம் சுமுகாய நம:
ஓம் ஏக தந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணிகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் கணாதிபதாய நம:
ஓம் தூமகேதுவே நம:
ஓம் கணாத்யக்ஷய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜாநநாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்ரீ மஹா கணாதிபதயே நமோ நம: