தினமும் அதிகாலை எழுந்து பாருங்கள். நிறைய சக்சஸ் கிடைக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் அன்றைய தினம் உங்களுக்கு எல்லாமே வெற்றி தான்.
இந்த நேரத்தில் தியானம் செய்து பாருங்கள். உங்கள் எண்ணங்களுக்கு அளவற்ற சக்தி உண்டாகும். சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வளிமண்டலத்தில் ஆற்றல் பரிமாற்றம் நடக்கும்.
இந்த நேரத்தில் வித்தியாசமான ஆற்றலைத் தரும் அற்புதங்கள் நடக்கும். இந்த அதிகாலை நேரத்தில் நாம் எழும்போது அந்த சூழலும் அமைதியும் நம்மை ஆட்கொள்ளும் ஒரு அதி அற்புதமான அனுபவமாக இருக்கும். நம்ம மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியைத் தரும்.
அதிகாலையில் எழும்போது அன்று முழுவதும் நமக்கு ஒரு வித எனர்ஜி கிடைக்கிறது என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாம் அடிவயிற்றிலிருந்து மூச்சுக்காற்றை உள்ளிழுத்து வெளியே விடும்போது நமது உடலுக்கு மிகவும் நல்லது. இந்த நேரத்தில் தான் நமக்கு நல்லா தூக்கம் வரும்.
தினமும் இந்த நேரத்தில் விழிப்பவர்களுக்கு சுயசார்புத்திறன் விழிப்புணர்வு அதிகமாகிறது. நம்மைப் பற்றி நன்கு யோசித்து நம்முடைய தவறுகளைத் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இந்த நேரத்தில் மனது வெறுமையாக இருப்பதால் படிக்கும்போது பசுமரத்தாணி போல படக்கென்று பதிந்து விடுகிறது. நிறைய விஷயங்களை மனதில் நிறுத்திக் கொள்ளலாம். நிறைய மில்லியனர்கள் இந்த நேரத்தில் தான் விழிப்பார்களாம்.
உடல் ஆரோக்கியமான நிலையில் தொடர்ந்து இருக்கும். சுத்தமான ஆரோக்கியமான காற்று இந்த நேரத்தில் தான் உங்களுக்குக் கிடைக்கிறது. அதிகாலையில் எழுவதால் சீக்கிரமாக சாதிக்க முடியலாம். சரியாக திட்டமிட்டு இலக்குகளை எளிதாக அடைய முடிகிறது.
நமக்கு நிறைய நேரம் கிடைப்பதால் நமக்கு எவ்வளவு கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்க முடிகிறது. பிரபஞ்ச சக்தியிடம் இந்த நேரத்தில் நீங்கள் என்ன வேண்டினாலும் அது எளிதில் கிடைத்து விடும். ஆனால் எதைச் செய்தாலும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
அந்தப்பழக்கம் தான் நம்மிடம் இல்லையே என சிரித்துக் கொண்டே சொல்பவர்களைப் பார்த்து பிரபஞ்சமும் அதனால் தான் உனக்கு என்னால் நீ கேட்டதைத் தர முடியவில்லை என சிரித்துக்கொண்டே பதில் சொல்லும். சூரியனின் இளம் கதிர்களை நாம் தினமும் 10 நிமிடம் அனுபவிக்கையில் நமக்கு நிறைய ஆற்றல்கள் உடலுக்குக் கிடைக்கிறது.
அதிகாலை எழுவது முதுமையான தோற்றத்திற்கு விடை கொடுக்கிறது. 100 வயசானாலும் நீங்க இளமைப்பொலிவுடன் இருக்கலாம். காலையில் 3 மணி முதல் 4 மணிக்குள் எழுந்து 2 டம்ப்ளர் இளஞ்சூடான நீரைக் குடிங்க. எப்பவுமே இளமையா ஜொலிக்கலாம்.
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து திரும்பவும் தூங்கினால் ரொம்பவே சோம்பேறியாகி விடுவீர்கள். தொடர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் 48 நாள்கள் விழிக்க வேண்டும். 49 வது நாள் நீங்கள் தன்னிச்சையாகவே எழ ஆரம்பித்து விடுவீர்கள்.
அப்புறம் 6 மாதங்கள் இதைப் பழகினால் யார் தடுத்தாலும் நீங்கள் லேட்டா எழ மாட்டீங்க. எப்பவுமே அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக வேலையைச் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.