குடும்பப்பிரச்சனையா? இன்று ஆடித்தபசு… கண்டிப்பாக கோவிலுக்குப் போயிட்டு வாங்க…!!!

ஆன்மிகத்தில் பெரிய நிலையை அடைய வேண்டுமா? குழந்தைப்பாக்கியம் இல்லையா? தம்பதியரிடையே கருத்து வேறுபாடா? நண்பர்களிடத்தில் பிரச்சனையா? எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு என்றால் உங்களுக்கு சந்தோஷம் தானே. அந்த நன்னாள் தான் இந்த பொன்னாள். இன்று…

sankarankoil

ஆன்மிகத்தில் பெரிய நிலையை அடைய வேண்டுமா? குழந்தைப்பாக்கியம் இல்லையா? தம்பதியரிடையே கருத்து வேறுபாடா? நண்பர்களிடத்தில் பிரச்சனையா? எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு என்றால் உங்களுக்கு சந்தோஷம் தானே. அந்த நன்னாள் தான் இந்த பொன்னாள். இன்று (10.08.2022) ஆடித்தபசு.

உலகில் ஏக இறைவன் ஒருவனே. வேறுபாடு இல்லை என்பதை உலகிற்கு உணர்த்த அம்பிகை இறைவனை நோக்கி ஊசி முனை தவம் இருக்கிறாள்.

sankaran koil2
sankaran koil

தவத்தின் காரணமாக இறைவன் சங்கரநாராயணனாக காட்சி அளிக்கிறான். இந்த நாளில் சங்கரன் கோவிலுக்குச் சென்று கோமதி அம்மனை தரிசித்து சங்கரநாராயணரை வழிபடும்போது மனதில் உள்ள சஞ்சலம் நீங்கும். ஆனமிகத்தில் ஏக இறைவனை வழிபடுபவர்கள் இன்று சங்கரன்கோவிலுக்குச் சென்று சங்கரநாராயணரைத் தரிசித்து வந்தால் ஆன்மிக வாழ்க்கையிலே ஒரு முன்னேற்றம் ஏற்படும் என்பர்.

அதேபோல நம் வீட்டில் குடும்பப்பிரச்சனை, நண்பர்களிடத்தில் பிரச்சனை என்றாலும் இறைவனையும், அம்பிகையையும் வழிபடலாம். தவக்கோலத்திலே அம்மன் இருந்து தவம் செய்த நிகழ்வு மிக மிக சிறப்பானது. அதேபோல மனதில் தோன்றக்கூடிய சஞ்சலங்கள், குழப்பங்கள் நீங்க வேண்டுமானால், காலையில் இருந்து விரதம் இருந்து அம்பிகையை வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Aadithabasu
Aadithabasu

இந்த மகிழ்ச்சியான நாளில் அம்பிகையிடமும், இறைவனிடமும் நாம் என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும். குழந்தைப்பேறு, திருமணத்தடை, கணவன் – மனைவி ஒற்றுமை இல்லாமை போன்ற பிரச்சனைகளில் சிக்கித்தவிப்பவர்கள் அம்பிகை, சங்கரநாராயணரை வழிபட்டு அங்கு வரும் தம்பதியரின் காலில் விழுந்து ஆசி வாங்கினால் உடனடி பலன் கிடைக்கும்.

அதேபோல குழந்தையின்மையால் பாதிக்கப்படுபவர்கள் அம்பிகையைத் தரிசித்து வருகையில் அம்மனின் அனுக்கிரஹத்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். சங்கரன் கோவிலுக்குப் போக முடியாதவர்கள் அருகில் உள்ள சிவலாயங்களுக்கோ அல்லது பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்குள்ள இறைவனை வழிபட்டு வந்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கும்.

சங்கரன்கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகில் உள்ள சிறுத்தொண்டநல்லூரில் இருக்கும் சங்கரன்கோவிலுக்கு கூட்டம் கூட்டமாகச் சென்று அங்குள்ள இறைவனைத் தரிசிப்பார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன