இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: 80ஐ தாண்டியதால் அதிர்ச்சி!

By Bala Siva

Published:

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து கொண்டே வரும் நிலையில் இன்று முதல்முறையாக ரூ.80ஐ தொட்டுவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரலாறு காணாத வகையில் முதல்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rupee vs dollar1 இன்று காலை அன்னிய செலவாணி சந்தை தொடங்கிய நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 79.9 என ஆரம்பித்த நிலையில் தற்போது 80.02 என வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி சதவீதம் உயரப் போகிறது என்ற தகவல் மற்றும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஆகிய இரண்டும் இந்திய ரூபாய் சரிவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

rupee vs dollar2இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே வருவதால் இந்தியாவில் முதலீடு செய்த வெளிநாட்டவர்கள் முதலீட்டை திரும்பப் பெற்று வருகிறார்கள் என்றும் அதனால் பங்குச்சந்தையில் வரும் நாட்களில் பெரும் வீழ்ச்சி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்திய ரூபாய் வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு என்பதை ரூ.80ஐ தாண்டியுள்ள நிலையில் இது ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிக அளவு உயரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment