தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்கள் வந்து கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக இளம் நடிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வந்து கொண்டே உள்ளனர். அவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் கதாநாயகனாக களத்தில் இறங்கியுள்ளார் லெஜன்ட் சரவணா.
இவர் தமிழகத்தின் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் நடிப்பில் தற்போது தி லெஜன்ட் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகிகளை அழைக்க பலரும் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
ஏற்கனவே சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த நடிகைகளுக்கு தி லெஜன்ட் படத்தில் நடிக்க அழைப்பு விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இறுதியாக இந்த திரைப்படம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி முடிந்துள்ளது.
ஆயினும் கூட படத்தின் வெளியீடு சற்று தள்ளிப் போய்க் கொண்டே வருகிறது. இந்த மாதம் 28ம் தேதியில் தி லெஜன்ட் திரைப்படம் உலகத் திரகங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான போஸ்டர்கள் இணையதளத்தில் வைரலாக்கி கொண்டு வருகின்றன. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் வாடிவாசல் பாடல் வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் அதிக அளவு பகிரப்பட்ட சாங்காக மாறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.