பொதுவாக உலகில் தினந்தோறும் பல்வேறு விதமான சாதனைகள் நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது. அதுவும் குறிப்பாக கிரிக்கெட் உலகில் தினம் தினம் ஒவ்வொரு சாதனைகளும் முறியடிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இங்கிலாந்து நிர்ணயித்த சாதனையை மீண்டும் இங்கிலாந்து அணியே முறியடித்து புதிய சாதனை நிர்ணயித்துள்ளது என்பது பல கிரிக்கெட் அணிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்திஉள்ளது.
அதன்படி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற புதிய சாதனையை மீண்டும் படைத்துள்ளது இங்கிலாந்து அணி. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது.
ஆம்ஸ்டெல்வீன் மைதானத்தில் நடந்த போட்டியில் நெதர்லாந்து அணிக்கு 499 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து. இங்கிலாந்து அணியில் மூன்று அதிரடி வீரர்கள் 100 அடித்து சாதனை செய்துள்ளனர்.
அதன்படி ஜாஸ்பர் பட்லர் 162 ரன்களும், டேவிட் மலன் 125 ரன்களும், பிலிப் சால்ட் 122 ரன்களும் அடித்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.