உலகில் மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டு வேகமாக பரவும் கொரோனா நோய் முதன்முதலாக 2019ஆம் ஆண்டு சீனாவில் தான் கண்டறியப்பட்டது. இந்நிலையில் சீனாவில் தற்போது மீண்டும் இந்த நோயின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.
இதனால் சீனாவில் உள்ள குறிப்பிட்ட சில மாகாணங்களில் ஊரடங்கு மீண்டும் நடைமுறை படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறுள்ள நிலையில் சீனாவில் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அன்மை தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி சீனாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள ஹாங்சூவில் செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.