கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த 1986ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த திரைப்படமாகும். மறைந்த இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் வந்த திரைப்படம் இது.
லட்சங்களில்தான் எண்பதுகளில் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு கொண்டிருந்த வேளையில் கோடிக்கணக்கில் செலவு செய்து ராஜ்கமல் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டது.
பிரபல எழுத்தாளரான மறைந்த சுஜாதா அவர்களின் கதை இது. ராக்கெட் கடத்தல் கும்பலுக்கும் உயர் போலீஸ் அதிகாரியான கமலுக்கும் நடக்கும் சம்பவங்களே கதையாகும்.
இப்படத்தில் கமல், சத்யராஜ், மனோரமா, அம்பிகா, லிசி, டிம்பிள் கபாடியா, ஹிந்தி நடிகர் அம்ஜத்கான், ஜனகராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். சுகிர்த ராஜா என்ற அட்டகாசமான வில்லன் வேடத்தில் சத்யராஜ் நடித்திருந்தார்.
இந்தியாவில் ராஜஸ்தான் அருகே உள்ள ஒரு ஊரில் இப்படத்தின் பெருமளவு படப்பிடிப்புகள் நடந்தன. அதில் புகழ்பெற்ற எலிக்கோவில் ஒன்றை காட்சிப்படுத்தி இருந்தனர்.
ஏஞ்சோடி மஞ்சக்குருவி, வனிதாமனி, விக்ரம் விக்ரம், மீண்டும் மீண்டும் வா உள்ளிட்ட பாடல்களும், படத்தில் இடம்பெறாமல் கேசட்டில் மட்டும் இடம்பெற்ற சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்னத்தாமரையே போன்ற பாடல்களும் புகழ்பெற்றது. படத்தின் பாடல்களையும் பின்னணி இசையையும் இசைஞானி இளையராஜா அமைத்திருந்தார் சிறப்பான முறையில் பாடல்கள் வந்திருந்தது.
இப்படம் வந்து இன்றுடன் 34 வருடம் ஆகிறது.