பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் வனிதா விஜயக் குமார் ஆவார், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே பிக் பாஸிற்கு கண்டென்ட் கொடுத்தவர் இவரே ஆவார்.
ஒவ்வொருநாளும் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி எகிறி செல்ல காரணமாக இருந்த இவர் ஓரிரு வாரங்களில் வெளியேற்றப்பட்டார். அதன்பின்னர் மக்கள் போர் அடிப்பதாக கூற பிக் பாஸ் மீண்டும் வனிதாவை வைல்டு கார்டு போட்டியாளராக களம் இறக்கினார்.
அதன்பின்னர் இவர் பற்றவைத்த நெருப்புக்கு இரையானது மதுமிதாவின் வெற்றிதான், மதுமிதா வெளியேறிய பின் வனிதா அனைவருக்கும் பிடிக்கும்படியாக நடந்துகொண்டார்.
அதன்பின்னர் வெளியேறும்போது ஒரு பாசமான தாயாகவே பார்க்கப்பட்டார். வெளியேறிய அவர் 8 கிலோ உடல் எடையைக் குறைத்ததுடன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, தற்போது கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
மேலும் குக் வித் கோமாளி வெற்றிக்குப் பின்னர் சொந்தமாக, யுடியூப் சேனல் துவங்கி அதில் சமையல் வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
இந்தநிலையில் ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள் திரைப்படம் நேற்று அமேசான் ப்ரைமில் வெளியாக, வனிதா மோசமாக விமர்சித்ததால் ரசிகர்கள் செம கடுப்பாகிவிட்டனர். மேலும் வனிதாவை இதுகுறித்து வலைதளங்களில் திட்டியும் வருகின்றனர். பொன்மகள் வந்தாள் படம் குறித்து திரைப் பிரபலங்கள் பலரும் சிறப்பான கருத்தினைப் பதிவு செய்தநிலையில் வனிதாவின் மோசமான விமர்சனத்திற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.