சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையினைத் துவக்கிய மணிமேகலை 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் ரொம்பவும் பிரபலம். தனது பேச்சுத் திறமையால் சன் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் வாய்ப்பினைப் பெற்றார்.
கலக்கப்போவது யாரு?, குக்கு வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸ்ஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் இவர் இன்னும் கூடுதலான ரசிகர்களையே பெற்றார்.
குக்கு வித் கோமாளியில் இவர் செய்யும் குறும்புகளுக்கு குழந்தைகள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரும் அடிமைகள் என்றே சொல்லலாம். இவர் 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதிக்காததால் காதர் ஹுசைன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நேற்று இஸ்லாம் பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாம் நண்பர்கள் கொண்டாடினர். அந்தவகையில் இந்த காதர்- மணிமேகலை ஜோடியும் கொண்டாடியுள்ளது.
அதாவது கொரோனா ஊரடங்குகாரணமாக வீட்டிலேயே தொழுகை செய்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடியுள்ளார் மணிமேகலை. அதில் முக்கிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம் பெண் போல் அழகாக கெட்டப் போட்டு காதருடன் இருக்கும் புகைப்படத்தையும் மணிமேகலை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் கிண்டலாக, “முன்னயெல்லாம் நான்தான் முஸ்லீம் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பிரியாணி கேட்பேன், இப்போ எல்லாரும் என்கிட்ட கேக்குறாங்க..: என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலர் அக்கா இந்த கெட்டப்பில் அழகா இருக்கீங்க என்றும் பாராட்டியுள்ளனர்.