நடிகர் ரோபோ ஷங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மனைவி பிரியங்கா குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு? போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பரிச்சையமானவர்.
இவரின் மகள் இந்திரஜா பரதநாட்டியக் கலைஞர், இவர் அட்லி இயக்கிய பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர், இவர்கள் குடும்பமாக அவ்வப்போது டிக் டாக் வீடியோக்களை போட்டு வருவர், இவர்களது வீடியோக்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
பிகில் படத்தில் இவர் நடித்த பாண்டியம்மாள் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டதுடன், திரையுலகப் பிரபலங்கள் பலர் இவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சமீபத்தில் தனது பாட்டி இறந்த சோகத்தில் மூழ்கி இருந்த இவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வந்தனர். அந்தவகையில் தற்போது இவர் ஜாலியாக ரசிகர்களுடன் லைவ் சாட்டில் உரையாடி வருகிறார்.
ரசிகர் ஒருவர் அவரிடம் கூடிய விரைவில் பிக் பாஸ் 4 துவங்கிவிடும், நீங்கள் பிக்பாஸ் 4 சீசனுக்கு செல்வீர்களா? என்று கேட்க, இந்திரஜா தடாலடியாகப் பதில் கூறியுள்ளார். அதாவது, “சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் நிச்சயம் போவேன். ஆனால், நான் மேஜர் இல்லைங்கறதுனால நிகழ்ச்சியில அனுமதிக்க மாட்டாங்க” என்று கூறியுள்ளார்.