பிரபல நடிகை அனுஷ்கா நடித்த ’சைலன்ஸ் என்ற படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் இப்படம் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அந்த செய்தியை தயாரிப்பார் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ‘சைலன்ஸ்’ படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக வேண்டாம் என்றால் சென்சார் தேவையில்லை. ஆனால் தற்போது சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளதால் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடித்துள்ள இந்த படத்தை ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ளார்.