விஜய் தொலைக்காட்சி முதல் 2 சீசனைப் போலவே 3 ஆவது பிக் பாஸ் சீசனும் பிரபலமானது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் ரேஷ்மா.
வேலைன்னா வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் வரும் புஷ்பா புருஷன் காமெடி மூலம் மிகவும் பிரபலமாகினார்.
அதைத்தவிர சன் சிங்கர் தொகுப்பாளராகப் பணியாற்றிய இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க வாணி ராணி, மரகத வீணை, உரிமை, என் இனிய தோழியே, சுந்தர காண்டம், ஆண்டாள் அழகர், வம்சம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் நடிகை ரேஷ்மா தற்போது பேயம்மா, போடா முண்டம், மை பெர்பெக்ட் ஹஸ்பண்டு போன்ற படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இவர் அடையாளம் தெரியாத அளவு குண்டாகிப் போய் இருந்தார். அதன்பின்னர் எவிக்ட் ஆகி வெளியே வந்த இவர் உடல் எடையினைக் குறைப்பதில் தீவிரம் காட்டி இருப்பார் போல, எவிக்ட் ஆன போட்டியாளர்கள் கடைசி வாரம் கலந்துகொள்ளும்போது உடல் எடையினை முன்பு போல் குறைத்து படங்களில் முன்பு நாம் பார்த்த பழைய ரேஷ்மாவாக வந்திருந்தார்.
தற்போது கொரோனா ஊரடங்கால் உடற்பயிற்சியில் கூடுதல் கவனம் செலுத்திவரும் அவர், “வாங்க உடற்பயிற்சி செய்யலாம்” என்று பதிவிட்டு, உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் சூப்பர் ரேஷ்மா என்று பாராட்டியுள்ளனர்.