பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு சுழி போட்டவர் நடிகை அனுஷ்கா. இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த படம் அருந்ததி. எத்தனை பேய் படங்கள் வந்தாலும் அருந்ததியை அடிச்சுக்கவே முடியாது.
அதேபோல் ராஜமவுலியின் பிரமாண்ட படைப்புகளான பாகுபலி 1 மற்றும் 2 என்ற 2 படங்களிலும் சிறப்பாக நடித்திருப்பார், பாகுபலி 2 வில் தனக்கே உரிய மிடுக்கோடு ஸ்கோர் பண்ணி இருப்பார்.
ஆனால் இவர் நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தால் உடல் எடை கூடிப் போக இவருக்கு பாகுபலி 2 விற்குப் பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. அதன்பின்னர் உடல் எடையினை குறைத்த, அனுஷ்கா கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள நிசப்தம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, இந்தப் படத்தின் டீசர் நவம்பர் 7 ஆம் தேதி வெளிவர உள்ளது. அனுஷ்காவை மையமாகக் கொண்ட படம் என்பதால், பலரும் இதுகுறித்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஊரடங்கு முடிந்தபின்னர் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தநிலையில், தற்போது இப்படத்திற்கு U/A சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது, மேலும் இந்தத் தகவலை இயக்குனர் ஹேமந்த் மதுகர் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.
