ரெமோ பட பாணியில் சர்ப்ரைஸ் கொடுத்த சஞ்சீவ்… ஆலியா ஹேப்பி அண்ணாச்சி!!

நடிகர் சஞ்சீவ் அபூர்வா என்னும் மலையாளப் படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். அதன்பின்னர் தமிழில் இவர் நடித்த குளிர் 100 டிகிரி திரைப்படம் சிறப்பான வெற்றியினைப் பெற்றது. அதன்பின்னர் இவர் காதல் தோழி, நீயும்…

நடிகர் சஞ்சீவ் அபூர்வா என்னும் மலையாளப் படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். அதன்பின்னர் தமிழில் இவர் நடித்த குளிர் 100 டிகிரி திரைப்படம் சிறப்பான வெற்றியினைப் பெற்றது.

அதன்பின்னர் இவர் காதல் தோழி, நீயும் நானும், சகாக்கள், குறும்புக்கார பசங்க, நண்பர்கள் கவனத்திற்கு, உயிருக்கு உயிராக, ஆங்கிலப் படம், 6 அத்தியாயம் போன்ற படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பெரிதாக வாய்ப்பு ஏதும் கிடைக்காத நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா-ராணி சீரியல் மூலம் சீரியலில் கால் பதித்தார்.

4f2ae8cf3bb83282e0891a5e1ec3d300

இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த ஆல்யாவைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது சஞ்சீவ் காற்றின் மொழி என்னும் புதிய சீரியலில் நடித்து வருகிறார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் மனைவி ஆல்யாவிற்கு சஞ்சீவ் மொட்டை மாடியில் செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதாவது ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ்க்கு லைட் செட்டிங்க்ஸ் போட்டு சர்ப்ரைஸ் கொடுத்ததுபோல் சஞ்சீவும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

மேலும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு லைவ் சாட்டில் ரசிகர்களுடன் இணைந்து ஆலியாவிற்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளார். மேலும் இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர்களின் முதல் திருமண நாளும் இன்றுதாங்க..

கடந்த ஆண்டு ஆலியாவின் பிறந்தநாள் அன்று சஞ்சீவ்- ஆல்யா ஜோடி ரொம்பவும் சிம்பிளாக ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன