நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக கால் பதித்தார், 2005 ஆம் ஆண்டு சினிமாவில் கால் பதித்த இவர், 15 ஆண்டுகளாக சினிமாத் துறையில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
இவர் 2006 ஆம் ஆண்டு சிம்புவுக்கு ஜோடியாக வல்லவன் படத்தில் நடித்து இருப்பார். அந்தப் படத்தில் சிம்பு- நயன்தாராவுக்கு ஏற்பட்ட நட்பானது காதலானது.
அதன்பின்னர் இந்த ஜோடி சில ஆண்டுகள் காதல் ஜோடியாக வலம் வந்தது, அதன்பின்னர் இவர்கள் இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டது. அதன்பின்னர் நயன்தாரா 2009 ஆம் ஆண்டு வில்லு படத்தில் நடிக்கும்போது பிரபுதேவாவுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவரைத் திருமணம் செய்த முடிவு செய்தார்.
இந்த செய்தி பெரிய அளவில் பிரச்சினை ஆனதை அடுத்து, இவர்கள் காதல் முறிந்து போனது. தற்போது விக்னேஷ் சிவனை நயன் காதலித்து வருகிறார். இவரது காதல் குறித்து பலரும் மோசமாக விமர்சிப்பதும், ட்ரோல் செய்வதும் என இருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் முக்குத்தி அம்மன் படத்தின் இயக்குனரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி இன்ஸ்டாகிராமில் தான் இதுவரை பார்த்ததில் ஒழுக்கமான நடிகை நயன்தாரா என்று கூறியுள்ளார்.
சமீபத்தைய ஆன்லைன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவரிடன் முக்குத்தி அம்மன் ரிலீஸ் குறித்தும் நயன்தாரா குறித்தும் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது அவர், நான் இதுவரை நடித்த நாயகிகளுள் மிகவும் ஒழுக்கமான நடிகை நயன், அதனால்தான் ஆண்களுக்கு முக்கியத்துவம் உள்ள சினிமாத் துறையில், அவர் லேடி சூப்பர் ஸ்டாராக மிளிர்கிறார்“ என்று கூறியுள்ளார்.