1 கோடி ஃபாலோவர்களைக் கொண்டுள்ள நடிகை சமந்தா!!

முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம்…

முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதோடு பாலிவுட் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார்.

சினிமாக்களில் பிசியாக இருக்கும் அளவு நடிகை சமந்தா சமூக வலைத்தளங்களில் பிசிதான். தன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை ரசிகர்களுடன்  அவ்வப்போது புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ பதிவிட்டு வருகிறார்.  அந்தவகையில் சமந்தா வீட்டில் தற்போது ஒரு கொண்டாட்டம் நடந்துள்ளதாக புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

f8802a9ed368880ddabc555fa83dd504

ஒருவேளை சமந்தா கர்ப்பாக இருப்பாரா? என ரசிகர்கள் தகவலுக்காக காதைத் திறந்து வைத்துக் காத்திருக்க கொண்டாட்டத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.

அதாவது இன்ஸ்டாகிராமில் நடிகை சமந்தாவை பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடி ஆகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இதனை ஒரு கொண்டாட்டம்போல் தன் வீட்டில் கொண்டாடியுள்ளார். இந்தக் கொண்டாட்டத்தை மற்றவர்களும் கொண்டாட வேண்டும் என்று அவர் 10 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளார். இதுகுறித்த பதிவினை அவரே புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் பாருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன