தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக 800க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800ஐ தாண்டியுள்ளது என்பதும், அதில் வழக்கம்போல் சென்னையை சேர்ந்தவர்கள் 500க்கும் மேல் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 827 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19372 என உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் இன்று மட்டும் 559 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12762ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 12 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 145 பேர் பலியாகியுள்ளதாகவும், தமிழகத்தில் இன்று 639 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 10548ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.