சிறுவயதில் ரேடியோ கேட்கும் காலம் முதல், இன்றைய நவீன முகநூல், ஸ்ம்யூல், டிக் டாக் காலம் வரை ரம்ஜான் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வரும் பாடல். வானுக்கு தந்தை எவனோ என்ற பாடல்.

ரஜினி, கமல் நடிக்க வந்த புதிதில் ப்ளாக் அண்ட் வொயிட் படமாக வந்த ஆடு புலி ஆட்டம் என்ற திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றது.
மிகவும் அற்புதமான இந்த இஸ்லாமிய பாடலை பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடி இருந்தார்.
தமிழில் குறிப்பிட்ட படங்கள் மட்டுமே இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் விஜயபாஸ்கர் இசையமைத்த பாடல் இது.
கன்னடத்தில் முன்னணி இசையமைப்பாளரான விஜயபாஸ்கர் வயோதிகம் காரணமாக கடந்த 2002 ல் மறைந்தார்.
அவர் மறைந்தாலும் அவர் இசையமைத்த இந்த பாடல் என்றும் மண்ணை விட்டு அழிய போவதில்லை.
