அம்மாவாகிறார் மைனா நந்தினி… ரசிகர்கள் வாழ்த்து!!

நகைச்சுவை நடிகை நந்தினி, சினிமாக்கள் பலவற்றில் நடித்துள்ளார். அருள்நிதி நடிப்பில் வெளியான வம்சம் படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். முதல் படத்திலேயே ரசிகர்கள் குறிப்பிட்டு சொல்லும் அளவு பரிச்சையமாகினார். அதன்பின்னர் கேடி பில்லா கில்லாடி…

நகைச்சுவை நடிகை நந்தினி, சினிமாக்கள் பலவற்றில் நடித்துள்ளார். அருள்நிதி நடிப்பில் வெளியான வம்சம் படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். முதல் படத்திலேயே ரசிகர்கள் குறிப்பிட்டு சொல்லும் அளவு பரிச்சையமாகினார்.

அதன்பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம், நம்ம வீட்டுப் பிள்ளை, வெண்ணிலா கபடிக் குழு, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்து இருப்பார். கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இடம்பெற்ற இவரது நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை.

3e4abe26535928d7c200186fb4e5b2d3

சினிமாவை விட விஜய் தொலைக்காட்சியில் இவர் நடித்த சரவணன் மீனாட்சி சீரியலின்மூலம் பெரிய அளவில் பிரபலமாகினார். அதாவது இந்த சீரியலில் இவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர்தான் மைனா, அந்தக் கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் பிரபலமடைய மைனா என்பது இவருடைய பெயராகியது. ரசிகர்கள் பலருக்கும் நந்தினி என்ற பெயரைவிட மைனா என்ற பெயரே தெரியும்.

இவர் கல்யாணம் முதல் காதல் வரை, பிரியமானவள், அரண்மனைக் கிளி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இவரது முதல் கணவர் 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார், அதன்பின்னர் அவர் சில மாதங்கள் கழித்து கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்றார்.

டிசம்பர் மாதம் இவருக்கும் சின்னத்திரை நடிகர் யோகேஷுக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா ஊரடங்கினால் வீட்டினுள் முடங்கி இருக்கும் இவர், கடந்தவாரம் இவரது பிறந்தநாளை வீட்டிலேயே கோலாகலமாகக் கொண்டாடினார்.

இந்தநிலையில் மைனா நந்தினி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன