தண்ணீர் பிரச்சினை, கார்பரேட், விவசாயம், அரசியல் பேசும் க/பெ. ரணசிங்கம்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு கனா மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை இவருக்கு ஹிட் படங்களாக அமைய, தற்போது ஒரு டஜன் படங்களை கையில் வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன்,…

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு கனா மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை இவருக்கு ஹிட் படங்களாக அமைய, தற்போது ஒரு டஜன் படங்களை கையில் வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரின் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் திட்டம் இரண்டு என்ற படத்தில் ஐஸ்வர்யா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பெ.விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள க/பெ.ரணசிங்கம் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் கவுரவ நடிகர் விஜய் சேதுபதி நடித்து இருந்தாலும், ஐஸ்வர்யா ராஜேஷ்க்கே முக்கியத்துவம் இருக்கும் என்று தெரிகிறது.

028a2ed4ba435a325237260203303aaf

நேற்று இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினைப் பெற்று வருகின்றது. தண்ணீர் பிரச்சினை, கார்பரேட், விவசாயம், அரசியல் என வழக்கமான கதைப்பாணியாக இருந்தாலும் திரைக்கதையில் அழுத்தமாக சொல்லி இருக்கிற விதம் கூடுதல் சிறப்பு.

சிட்டிசன் பட பாணியில் அதிகாரமிக்க வர்க்கத்தினரிருக்கு இயலாத மக்களின் நிலைமையினை புரியவைக்க நினைக்கு போராட்டம் என்பது ட்ரெய்லரிலேயே புரிகிறது. அறம் படத்தினை உருவாக்கிய அதே குழு இந்தப் படத்தையும் உருவாக்கியதால் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்று தெரிகிறது, இது வெளியான ஒரே நாளில் பல லட்சக்கணக்கிலான பார்வைகளைப் பெற்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன